மாவத்தகமை, பறகஹதெனிய ஜும் ஆப்
பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள அறிவுறுத்தல் பலகைகளை அவ்விடத்திலிருந்து
அகற்றுமாறு பெலச நீதவான் நாமல் பெரேரா உத்தரவிட்டுள்ளார். பறகஹதெனிய
ஜும்ஆப் பள்ளிவாசலின்
மௌலவிக்கும், வீதி அதிகார சபை அதிகாரிக்குமே மேற்கண்டவாறு நேற்று
வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். குறித்த அறிவுறுத்தல் பலகையை 14
நாட்களுக்குள் அகற்றிவிடுமாறே அவர் உத்தரவிட்டுள்ளார்.
மாவத்தகமை போலீஸ் நிலைய பொருப்பதிகாரி
பிரதேசத்தின் சிங்கள பௌத்தர்கள் கிளந்து எழுவதை தடுக்கும் நோக்கில் அந்த
பதாக்கைகளை அகற்ற அனுமததிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய வழக்கு விசாரணயின்
போது இந்த தீர்ப்பு வழங்குகப் பட்டுள்ளது.
அந்த எச்சரிக்கைக்கு தொடர்ந்து மறுதினம்
பொலிஸார் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள அறிவுறுத்தல் பலகையை அகற்ற
முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும் பொலிஸாருக்குமிடையே கருத்து
முரண்பாடுகள் இடம் பெற்றதுடன் ஊர் மக்கள் திரண்டு அதனைத் தடுத்து
நிறுத்தினர். நீதி மன்றத்தின் சட்ட ரீதியான ஆணையுடன் வந்தால் இதனைக்
அகற்றுவதற்கு நாங்கள் அனுமதிப்போம் என்று கூறி இதனை அகற்றவிடாது தடுத்து
நிறுத்தினர்.
அதன் பின்னர் நேற்று பறகஹதெனிய ஜும்ஆப்
பள்ளிவாசலுக்கு முன்பாகவிருந்த அறிவுறுத்தல் பலகையை முஸ்லிம் ஆசிரியர்
ஒருவர் சேதப்படுத்த முயன்றதாக தெரிவித்து கைதாகியுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment