• Latest News

    August 21, 2013

    எகிப்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் தலைவரின் மகன் சுட்டுக் கொலை

    கெய்ரோ,
    எகிப்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் தலைவரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்டார்.http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Brotherhood-leader%27s-son.jpg
    83 பேர் கொல்லப்பட்டனர்
    எகிப்து நாட்டில் முன்னாள் அதிபர் முர்சியின் ஆதரவாளர்கள் ராணுவத்தின் தயவில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் 638 பேர் செத்தனர்.
    இதனைத் தொடர்ந்து புதிய போராட்டம் நடத்தப்பட்டது. பேரணியாக சென்றவர்கள் மீது நடந்த வன்முறை தாக்குதலில் சுமார் 83 பேர் கொல்லப்பட்டனர். இதில் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

    தலைவரின் மகன் கொலை
    கெய்ரோவின் மையப் பகுதியில் உள்ள அல்–பாத் மசூதியில் போராட்டக்காரர்கள் பலர் தஞ்சம் புகுந்தனர். அந்த மசூதியை சுற்றி போலீஸ் படை முற்றுகையிட்டது. அதேசமயம் ஆத்திரம் அடைந்த மக்கள் பலமுறை மசூதிக்குள் நுழைந்து போராட்டக்காரர்களை தாக்க முற்பட்டனர். ஆனால் போராட்டக்காரர்களும், ஆத்திரமடைந்திருக்கும் மக்களுக்கும் இடையே பொலிஸ் படை பாதுகாப்பு வளையம் போல் இருந்தது.
    இந்த வன்முறையில் போராட்டத்தை வழிநடத்தி வரும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் தலைவர் முகமது பாடியின் மகன் அம்மார் பாடி (வயது 38) சுட்டுக் கொல்லப்பட்டார். ராம்சேஸ் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் அவர் கொல்லப்பட்டார்.
    வழக்கு விசாரணை
    இந்த தகவலை எகிப்து அரசின் சகோதரத்துவ விடுதலை கட்சி மற்றும் நீதிக்கட்சி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முகமது பாடி, இஸ்லாமிய இயக்கங்களின் பொது வழிகாட்டியாக இருந்து வருகிறார். அவர் மீது வன்முறையை தூண்டியதாக போடப்பட்ட வழக்கு விசாரணை 25–ந்தேதி தொடங்க இருக்கும் நேரத்தில் அவரது மகன் கொல்லப்பட்டுள்ளார்.
    ஏற்கனவே சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது இல்–பெல்டாகி என்பவரின் மகள் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எகிப்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் தலைவரின் மகன் சுட்டுக் கொலை Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top