சஹீத் அஹமட்:
கிராண்ட்பாஸ்
சம்பவத்தை அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து சுமூகமாக தீர்த்து
கொண்டதாகவும் குறுகிய இலாபம் பெறும் நோக்கில் செயற்பட்டவர்கள் சிலர்
சம்பவத்தை பெரிது
படுத்தியதாகவும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்ற
குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்
ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்துள்ள பீரிஸ்,
அரசியல்வாதி, பொதுத்துறை உத்தியோகத்தர்கள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும்
அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் ஒரே விதமாக சட்டம்
அமுல்படுத்தப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்க்கும் இடையில் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் கடந்த 30
வருடங்களாக இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றது. அதன் திருத்தச் சட்டவரைவு
பாதுகாப்பு நடவடிக்கைக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. அந்தப் பயங்கரவாதத்
தடைச் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யமாட்டோம் .கம்பஹா, ரத்துபஸ் வலவைச்
சேர்ந்த மக்கள் சுத்தமான தண்ணீர் கேட்டு வெலிவேரியவில் நடத்திய எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தின் போது மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையில் இடம்பெற்ற
மோதல்களின் போது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்
ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் சட்டத்துக்கு அப்பால்
சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வைராக்கியம் மற்றும்
பாகுபாட்டைக் காண்பிப்பவர்களுக்கு எதிராகவும் சட்டநடிவடிக்கை எடுக்கப்படும்
என்று ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்துள்ள அமைச்சர், இனங்களுக்கு
இடையில் குரோதங்களையும் துவேஷத்தையும் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம்
அமுல்படுத்தப்படுமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸ் சம்பவத்தை அனைத்து மதங்களை
சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து சுமூகமாக தீர்த்து கொண்டதாகவும் குறுகிய
இலாபம் பெறும் நோக்கில் செயற்பட்டவர்கள் சிலர் சம்பவத்தை பெரிது
படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு
தண்டனை விதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இதன்
போது மேலும் தெரிவித்துள்ள பீரிஸ், அரசியல்வாதி, பொதுத்துறை
உத்தியோகத்தர்கள், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் அதிகாரிகள் உள்ளிட்ட
அனைத்துத் தரப்பினருக்கு எதிராகவும் ஒரே விதமாக சட்டம்
அமுல்படுத்தப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
அதேவேளை பொலிஸ், நீதியமைச்சின் கீழ்
கொண்டுவராமல் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பிலான அமைச்சின் கீழ்
கொண்டுவந்துள்ளமை தொடர்பில் நவநீதம்பிள்ளை தனது எதிர்ப்பை இந்தச்
சந்திப்பில் வெளியிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment