சர்வசேத்திற்கு கையளிப்பதற்கான விதிகளும் இராணுவ நீதிமன்றின் யாப்பில்
இல்லையென தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வெலிவேரிய சம்பவம் தொடர்பிலான
இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கையை சர்வதேசத்திற்கு சமர்ப்பிக்க போவதாக
அறிவித்துள்ளமையின் பின்னணியில் நவனீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் ஆதிக்கம்
செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிவேரிய சம்பவம் தொடர்பிலான இராணுவ நீதிமன்றின் விசாரணை அறிக்கையை
சர்வதேசத்திற்கு சமர்ப்பிக்க அரசாங்கம் ஆவலாக உள்ளமையும் யுத்தக்
குற்றங்கள் தொடர்பிலான இராணுவ நீதிமன்ற விசாரணை அறிக்கையை சர்வதேசத்திற்கு
சமர்ப்பிக்க அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளமையும் ஜனநாயக நீரோட்டத்தில்
தமிழ் சிங்கள பேதத்தினை வெளிக்கொணர்வதாக அமைகின்றது.
இதேவேளை, யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இராணுவ முகாம்களில் வடபகுதி
மக்களை சாட்சியமளிக்குமாறு அரசாங்கம் தெரிவித்த போது மௌனம் காத்த இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வெலிவேரிய சம்பவம் தொடர்பில் மாத்திரம்
கரிசனை எழுந்துள்ளமை சந்தேகத்திற்குரிய விடயமே, வெலிவேரிய சம்பவம்
தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களை கனேமுல்ல முகாமிற்கு சென்று
சாட்சியமளிக்குமாறு அரசாங்கம் கோரிய போது
அவசரகால சட்டம் நடைமுறையில் இல்லாத போது முகாமிற்கு சென்று மக்கள்
சாட்சியமளிக்க முடியாது என அரசாங்கத்தின் கோரிக்கையை இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழு நிராகரித்தது.
எனனும் இறுதிக்கட்ட யுத்ததின் போது பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களை
முகாமிற்கு சென்று சாட்சியமளிக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க
மனித உரிமைகள் ஆணைக்குழுவும் மௌனித்து பச்சைக்கொடி காட்டியது.
இவ்வாறான நிலைமைகள் இலங்கையில் ஜனநாயகம் தோற்றுப் போயுள்ளதை நன்கு எடுத்துணர்த்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment