• Latest News

    August 20, 2013

    ஜனாதிபதியைக் கூட சந்திக்க முடியவில்லை -ஹசன் அலி

    அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் ஆளும் கட்சியில் நீடிப்பதா இல்லையா என்பதனை தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
    முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் சில பிரச்சினைகளுக்கு அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் கட்சியின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
    முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் சிறுபான்மையினராகவே நோக்கப்படுவதாகவும், முஸ்லிம்கள் உதர்சீனம் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஹியங்கனையில் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஜனாதபதியிடம் பேச்சுவார்த்தை நடத்த பதினைந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரத்தை ஒதுக்கித் தருமாறு கோரியிருந்த போதிலும், இதுவரையில் அந்த சந்திப்பு நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    கடந்த வாரம் கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பிலும் ஜனாதிபதியை சந்திக்க கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதற்கும் பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிராண்ட்பாஸ் சம்பவத்தை சில அமைச்சர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
    முஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க உள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதியைக் கூட சந்திக்க முடியவில்லை -ஹசன் அலி Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top