கண்டி-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு நன்றிக் கடன் உள்ளவராக ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ இருப்பார் என நம்புவதாக அக்கட்சியின் தேசிய தலைவரும் நீதி
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
18ஆவது திருத்தச் சட்டத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை
வழங்கி பலமுள்ள அரசாங்கமொன்றை அமைக்க உதவியதற்காகவே ஜனாதிபதி எமக்கு
நன்றிக்கடன் உள்ளவராக என அவர் குறிப்பிட்டார்.
மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு கண்டி, மஹிய்யாவையில் நடைபெற்ற
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப்
போட்டியிடும் நோக்கங்களில் ஒன்று தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கும்
என்பதில் ஐயமில்லை. மத்திய மாகாணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து
போட்டியிடுகின்றது.
இவர்களை எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி விமர்சிப்பதில்லை.
எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமானால் அமைச்சர்
ஆறுமுகம் தொண்டமானின் உதவி தேவைப்படும் என்பதால் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸை விமர்சிப்பதில்லை.
இதேநிலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் உண்டு. இத்தேர்;தலில்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சனத்திற்குட்படுத்தாத ஆளும் தரப்பும்;
மற்றும் எதிர்க்கட்சிகள் எம்மை விமர்சிப்பது பொருத்தமானதா? என்று எண்ணிப்
பார்க்க வேண்டும்.
2001ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ்
உதவியது. 2004இல் ஆட்சியைப் பறிகொடுத்த ஐக்கிய தேசிய கட்சிக்கு 2014 இல்
பத்து வருடங்களை அடைந்தாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமானால் பெரும்பான்மை
மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது
யதார்த்தமாகும்.ஆனால் பெரும்பான்மை வாக்குகளைக் கவர்ந்து அரசாங்கத்தை
அமைப்பதற்கான நகர்வுகளை எடுக்க வேண்டிய ஐக்கிய தேசிய கட்சி அதனை செய்யாது
எம்மை விமர்சித்துத் திரிகின்றது” என்றார்.
0 comments:
Post a Comment