• Latest News

    August 27, 2013

    சிரியாவுக்கு எதிரான சர்வதேச கூட்டமைப்புடன் துருக்கி இணைந்து கொள்ளும்

    davutoglu
    ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் சிரியா குறித்த பரந்தளவிலானதொரு அபிப்பிராயம் எட்டப்படாவிடின், சிரியாவுக்கு எதிரான சர்வதேச கூட்டமைப்புடன் துருக்கி இணைந்து கொள்ளும் என்று துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவூத் ஒக்லூ தெரிவித்துள்ளார்.

    அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் எப்போதும் சர்வதேச சமூகத்துடனும் ஐ.நாவின் முடிவுகளுடனும் இணைந்து செயற்படுவதையே விரும்புகிறோம். ஐ.நா வின் பாதுகாப்பு சபையிலிருந்து எதிர்பார்க்கப்படும் முடிவு வராவிடின், ஏனைய மாற்றுத் தீர்வுகள் திட்டத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    தற்போது 36-37 நாடுகள் சிரிய விவகாரம் பற்றிய மாற்றுத் தீர்வுகள் குறித்து கலந்துரையாடி வருவதாகவும், இந்த வகையில் சிரியாவுக்கு எதிரான கூட்டணியொன்று உருவாக்கப்படுமாயின், துருக்கி அதில் இணைந்து கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சிரிய ஜனாதிபதி பஷர் அஸத், கடந்த இரண்டரை வருடங்களாக மேற்கொண்டு வரும் நாசகார வேலைகளை கடுமையாக விமர்சித்து வரும் துருக்கி, 5 இலட்சம் சிரிய அகதிகளை பராமரித்து வருவதோடு, சிரிய எதிரணியின் ஒழுங்கமையும் மையாகவும் இயங்குகிறது.

    சர்வதேச சமூகம் சிரிய விவகாரம் பற்றிய தீர்க்கமானதொரு நிலைப்பாட்டை எடுக்காமையை துருக்கி கடுமையாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிரியாவுக்கு எதிரான சர்வதேச கூட்டமைப்புடன் துருக்கி இணைந்து கொள்ளும் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top