ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது உண்மை கண்டறியும்
பயணத்தில் இரகசியக் கூட்டங்களை நடத்தியுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் விமல்
வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
“சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மெய்க் காவலர்களையும் விட்டு
விட்டு, நவநீதம்பிள்ளை கிழக்கில் இரகசிய சந்திப்பை நடத்தியுள்ளார்.
திருகோணமலையில், தனது மெய்க்காவலர்களுக்குக் கூடத் தெரிவிக்காமல்,
இரகசிய கூட்டத்தை நடத்தி நாட்டுக்கு எதிராக சதி செய்ததன் மூலம், அவர்
இராஜதந்திர நெறிமுறைகளை மீறிவிட்டார்.
நாட்டை விமர்சிக்கும் இன்னும் பலரை இரகசியமாக சந்திக்க நவநீதம்பிள்ளை
திட்டமிட்டுள்ளார். எனவே அவர் நியாயமான அறிக்கையை சமர்ப்பிக்கமாட்டார். ”
என்றும் சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, நவநீதம்பிள்ளை எங்கு செல்வதற்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, நவநீதம்பிள்ளை எங்கு செல்வதற்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment