• Latest News

    December 11, 2013

    சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி நியமனம் பற்றி....

    எஸ்.அஷ்ரப்கான்
    சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி நியமனத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடுவேன் என சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஏ.கரீம் தெரிவித்தார். இந்த பதவிக்கு தன்னை நியமிக்க எத்தனிப்பது மனித உரிமை மீறலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
    இந்நியமனம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டு என்னையும் மக்களையும் சிலர் குழப்பி வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவித அறிவித்தல்களும் எனக்கு கிடைக்கவில்லை எனவும் அதிபர் கரீம் மேலும் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

    'கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சாய்ந்தமருது கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் என்னை சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரியாக பொறுப்பேக்குமாறு கட்டாயப்படுத்தினர்.

    நான் அதிபர் தரம் - 1 ஐ சேர்ந்தவர் என்றும் இப்பதவியை வகிப்பதற்கு கல்வி நிருவாக சேவை தரத்தை சேர்ந்தவர்கள் பலர் உள்ளனர் அவர்களே இதற்குப் பொருத்தம் எனக் கூறி இதனை ஏற்பதற்கு சம்பவ இடத்திலேயே மறுப்புத் தெரிவித்தேன்.

    தான் இதற்கு இணங்காவிட்டாலும் குறித்த பாடசாலையில் பல வருடங்களாக கடமையாற்றிய காரணத்தால், நான் இந்த பாடசாலையிலிருந்து வெளியேறவேண்டும் என நிற்பந்திக்கப்பட்டேன். இப்பாடசாலை அதிபராக கடமையேற்ற காலப்பகுதிக்குள் பல முன்னேற்றகரமாண வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்துள்ளேன்.

    அதேவேளையில் எமது பாடசாலையிலிருந்த திறமையான ஆசிரியர்களை பொறுத்தமில்லாத காலங்களில் இடமாற்றங்கள் செய்து விட்டு, கல்வி பின்னடைவுக்கு அதிபர் மீது குற்றம் சுமத்தவது எவ்வகையில் நியாயமாகும். அதேவேளை கல்முனை வலயத்தில் என்னை விடவும் பல வருடங்கள் ஒரே பாடசாலையில் கடமையாற்றி வருகின்ற அதிபர்கள் பலர் இருக்க, எனக்கு மட்டும் இவ்வாறான நியதியைக் கொண்டு வருவதானது யாரை திருப்திப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முடிவு என்பது எனக்குத் தெரியாது.

    எமது வலயத்தினுள் சில பாடசாலைகளில் அதிபர் தரம் கிடைத்தும் பல வருடங்களாக எந்த ஓரு பாடசாலையின் பொறுப்புக்களை பெறுப்பேற்காத அதிபர்கள் உள்ளனர். அதேவேளை எமது வலயத்தில் தரம் கூடிய அதிபர்கள் உள்ள நிலையில் அதிபர் தரத்தில் குறைந்த நிலையில் உள்ளவர்களிடம் பாடசாலைகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

    சில தரம் கூடிய அதிபர் தரத்தில் உள்ளவர்கள் பாடசாலைகளின் பொறுப்புக்களை கேட்ட போதிலும் நேர்முக பரீட்சைகள் நடாத்தி முடித்த தருவாயிலும் அவர்களுக்கு பாடசாலையின் பொறுப்புக்களை வழங்காது என்னை மாத்திரம் இப்படி குறி வைப்பது எனது அடிப்படை உரிமையை மீறுவதாகவே கருதுகிறேன். ஆகையால் இது தொடர்பாக நியாயம் கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவேன்' என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி நியமனம் பற்றி.... Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top