அஹமட் -
அம்பாரை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று (08.09.2013) அதிகாலை இரண்டாவது நாளாகவும்; காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்துள்ளன.
இன்று அதிகாலை சம்மாந்துறைப் பிரதேசத்தின் மத்திய மகாவித்தியாலயத்திற்கு அண்மிய பகுதிக்கு வருகை தந்த காட்டு யானைகள் பாடசாலையின் சுற்று மதில்களை சேதப்படுத்தியுள்ளன. அத்தோடு, பாடசாலையில் உள்ள பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளன.
அத்தோடு, பாடசாலைக்கு அருகில் உள்ள இரண்டு வீடுகளின் சுற்று மதில்களையும் சேதப்படுத்தியுள்ளன. இதே வேளை, நேற்று தாக்கிய வீடொன்றை இன்று அதிகாலையும் காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளன.
சம்மாந்துறைப் பிரதேசத்தில் இரவு வேளைகளில் காட்டு யானைகள் தொடர்ச்சியாக வருகை தருவதனால் பொது மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளார்கள்.

0 comments:
Post a Comment