• Latest News

    September 08, 2013

    மாலைதீவின் ஜனாதிபதியாக முகமது நஷீத் மீண்டும் தெரிவு!

    மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் மாலைதிவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் . நேற்று நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதிக்கான தேர்தலில்  தற்போதைய அதிபர் முகமது வகீத், முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் அதிபர் கயூமின் சகோதரரும், மாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராகிம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
     
    நேற்று மாலை 4 மணிக்கு முடிவடைந்த வாக்குப்பதிவில்  64 சதவீத ஓட்டுகள் பதிவாகின. உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முன்னாள் அதிபர் முகமது நஷீத் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 18 மாத இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் அதிபராக பொறுப்பு ஏற்கிறார்.

    மாலைதீவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். 192 தீவுகள்இ 40 ரிசார்ட்டுகள் ஆகியவற்றில் 470 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

    வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதிபர் முகமது வகீத் ஒரு பள்ளிக்கூடத்தில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று தமது வாக்கையளித்தார். இதே வேளை வரிசையில் நிற்க சொன்னதால்இ அவருடைய மனைவி வாக்களிக்கவில்லை. பிறகு நிருபர்களிடம் பேசிய முகமது வகீத்இ தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இத்தேர்தலில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார். 2 ஆயிரத்து 229 உள்ளூர் பார்வையாளர்களும் 102 சர்வதேச பார்வையாளர்களும், ஆயிரத்து 342 அரசியல் கட்சி பிரதிநிதிகளும் சுமார் 2 ஆயிரம் உள்ளூர், சர்வதேச பத்திரிகையாளர்களும் இந்த தேர்தலை கண்காணித்தனர்.

    அத்துடன், இந்திய உயர்மட்ட குழுவும் தேர்தல் பணிகளை பார்வையிட்டது. இக்குழுவில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் ஜே.எம்.லிங்டோ, பி.பி.டாண்டன், என்.கோபாலசாமி, மாலத்தீவுக்கான முன்னாள் இந்திய தூதர் எஸ்.எம்.கவாய் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.

    மேலும், இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் குழுவும், மாலத்தீவு தேர்தல் கமிஷனுடன் இணைந்து சாப்ட்வேர் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை கவனித்தது. வன்முறை ஏதும் இன்றி அமைதியாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
     
    இந்திய பெருங்கடல் நாடான மாலைதீவில் மமூன் அப்துல் கயூம் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008–ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. நேற்று நடைபெற்றது இரண்டாவது ஜனநாயககத் தேர்தலாகும்.

    2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர்இ ராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகினார். துணை அதிபராக இருந்த முகமது வகீத் அதிபர் ஆனார்.
     
    18 மாத இடைவெளிக்கு பிறகு முகமது நஷீத் மீண்டும் அதிபராக வெற்றி பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக தேடப்பட்டபோது அவர் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மாலைதீவின் ஜனாதிபதியாக முகமது நஷீத் மீண்டும் தெரிவு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top