(gp.vk;.vk;.V.fhjh;)
இதற்கு முன் இவ்வாறானதொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வில்லை எனவும் இச்சத்திர சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டவர்கள் இறந்து விட்ட சம்பவங்களே இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நோயாளி சுகமாக உள்ளதுடன் ஊடகங்களில் கருத்தும் தெரிவித்துள்ளார். மருதமுனையைச்சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் இதற்கு முன்னரும் சில சத்திரசிகிச்சை சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரத்த மாற்றீடின்றி குடல்மாற்று சத்தி சிகிச்சை மேற்கொண்டு சம்மாந்துறை வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம். சமீம் சாதனை மேற்கொண்டுள்ளதாக கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் தெரிவித்துள்ளார். இரப்பையை அகற்றி புதிய உணவுக்கால்வாய்த் தொகுதியியை உருவாக்கி சத்திர சிகிச்சை ஒன்றை சம்மாந்துறையைச் சேர்ந்த ஓருவருக்கு விசேட அழைப்பின் பெயரில் செய்தமையினாலேயே சத்திரசிகிச்சை நிபுணர் ஏ.டபிள்யு.எம். சமீம் பாராட்டப்பட்டுள்ளார்
இதற்கு முன் இவ்வாறானதொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வில்லை எனவும் இச்சத்திர சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டவர்கள் இறந்து விட்ட சம்பவங்களே இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நோயாளி சுகமாக உள்ளதுடன் ஊடகங்களில் கருத்தும் தெரிவித்துள்ளார். மருதமுனையைச்சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் இதற்கு முன்னரும் சில சத்திரசிகிச்சை சாதனை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment