பொத்துவில் பிரதேசத்தில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக பொத்துவில் பிரதேசத்தில் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக பொத்துவில் பொதுச் சந்தைக் கட்டிட தொகுதி பலத்த சேதங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும், பொத்துவில் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளதாகவும், தென்னை மரங்கள் உட்பட பல மரங்கள் முறிந்து விழுந்தும், சாய்ந்தும் காணப்படுவதாகவும் பொத்துவில் பிரதேச சபையின் உதவித் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஜுதீன் முரசுக்கு தெரிவித்தார்.
மேலும், அங்கு மின்சாரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டு, பொத்துவில் பிரதேசம் இருளில் மூழ்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment