• Latest News

    November 10, 2013

    "தமிழக உணர்வுகளுக்கு மதிப்பளித்தே பிரதமர் செல்லவில்லை"

    தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லவில்லை என்று பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் வி நாராயணசாமி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
    அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக, "இந்த மாநாட்டில் பங்குபெற பிரதமர் சென்றால், இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைக்கு நாம் அங்கீகாரம் கொடுத்தமாதிரி இருக்கும் என்று சொல்லியிருந்தார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.

    எனினும், போருக்கு பின்னர் இலங்கை இந்தியாவுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கும், பிரதமர் கொழும்பு செல்லாமல் இருப்பதற்கும் தொடர்பு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
    இருந்தாலும் இதனால் இந்திய-இலங்கை உறவுகள் பாதிக்கப்படாது எனவும் அவர் மேலும் கூறினார்.
    கொழும்பு காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியக் குழுவுக்கு வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையேற்றுச் செல்கிறார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: "தமிழக உணர்வுகளுக்கு மதிப்பளித்தே பிரதமர் செல்லவில்லை" Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top