• Latest News

    November 10, 2013

    ஒன்றிணைந்ததால் எந்தவொரு இலக்கையும் வெற்றிகொள்ள முடியும்; ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ

    ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (2013.11.10) நடைபெற்ற 
    பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை

    பொதுநலவாய செயலாளர் நாயகம் அவர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே,
    கௌரவ தலைவர் அவர்களே, மேதகைகளே, இளைஞர் பிரதிநிதிகளே,

    இலங்கைவாழ் மக்களினதும் இளைஞர்களினதும் சார்பாக பொதுநலவாய இளைஞர் மாநாட்டுக்கு உங்கள் எல்லோரையும் அன்புடன் வரவேற்கிறேன்.
    ஓன்றிணைந்து எந்தவொரு இலக்கையும் வெற்றிகொள்ள முடியும் என்ற வகையில் இந்த மாநாட்டின் கருப்பொருளாக 'முழுநிறைவான அபிவிருத்தி - மிகப் பலமான ஒன்றிணைவு' என்ற கருப்பொருள் மிகவும் பொருத்தமானதாகும். 9வது பொதுநலவாய இளைஞர் மாநாடு வளர்ந்துவரும் எழில்மிகு ஹம்பாந்தோட்டை நகரத்தில் நடைபெறுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
    மூன்று தசாப்த காலமாக எமது நாட்டை பீடித்திருந்த பயங்கரவாம் எமது இளைஞர் சமூகத்திற்கு மிகப் பெறும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. பயங்கரவாதிகளால் பலவந்தமாக படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஒரு சிறுவர் போராளியை அல்லது ஒரு இளைஞரை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த சிறுவர்களும் இளைஞர்களும் தங்களது சுந்தர இளைஞர் பருவத்தையும் குழந்தைப் பருவத்தையும் இழந்துவிட்டனர். இந்த நீண்டகாலப் பகுதியில் எமது இளைஞர்கள் மிகப் பெரும்பாலான பெறுமதியான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டனர். இந்த பயங்கரவாதிகளால் பலவந்தமாக படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் சரணடைந்ததன் பின்னர் அவர்களுக்கு புனர்வாழ்வளித்து மிகத்துரிதமாக மீண்டும் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் காலப்போக்கில் மீண்டும் மையநீரோட்டத்தை வந்து சேர்வதற்கு சமூகம் உதவுமென நான் உறுதியாக நம்புகிறேன்.
    எமது இளைஞர்களை அவர்களது விடயங்களுக்காக அர்ப்பணித்த ஒரு உயிரோட்டமான மாநாட்டில் பங்கேற்கச் செய்வது இலங்கை போன்ற ஒரு நாட்டுக்கு தற்போது மிகவும் முக்கியமானதாகும். உலகெங்கிலுமுள்ள இளைஞர்களை எமது நாட்டில் ஒன்று சேர்த்;ததன் மூலம் பொதுநலவாய இளைஞர் மாநாடு அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளது. எமது நாடு சமாதானத்தையும் முன்னெப்போதுமில்லாத அபிவிருத்தியையும் கண்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் இந்த மாநாடு இங்கு நடைபெறுவது அந்த முக்கியத்துவத்தை இன்னும் அதிகரிக்கிறது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளி ஒருவர், எமது நாட்டின் சுதேச சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், வழுவிழந்த இளைஞர் பிரதிநிதி ஒருவர் இலங்கை பிரதிநிதிகள் குழுவில் உள்ளடங்கியிருப்பதை பார்த்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். மானிடர்களுக்கு மத்தியில் மானிட கன்னியம், சமத்துவத்தை கொண்டு வரும் பொதுநலவாய கொள்கைகளுக்கு நாம் மிகுந்த கடப்பாட்டுடன் உள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    அன்பர்களே, இன்று 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் உலக சனத்தொகையில் ஐந்தில் ஒன்றாக இருக்கும் அதேநேரம் ஆசியாவில் வாழும் மொத்த இளைஞர் சனத்தொகை 60மூமாகும். இலங்கையிலும்கூட இளைஞர்கள் குறிப்பிடத்தக்க வீதத்தில் உள்ளனர். மொத்த சனத்தொகையில் அவர்கள் 26மூமாக உள்ளனர். இந்த எமது சனத்தொகையின் மிகவும் சக்திமிக்க பிரிவினரான இவர்களை அபிவிருத்தி செயல்முறைக்கு பங்களிக்கும் வகையில் இணைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இலங்கை சூழலுக்கு மட்டுமல்லாமல் பூகோள மட்டத்தில் இளைஞர்களுக்கு பொறுத்தமான உப கருப்பொருள்களை இந்த மாநாடு தேர்ந்தெடுத்துள்ளதென நான் அறிகிறேன். இதன்மூலம் இளைஞர்களின் முக்கிய தேவைகள் கவனத்தில் கொள்ளப்படுவதோடு, மற்றுமொரு முக்கிய அம்சமான சமூக தீமைகளிலிருந்து இளைஞர் சமூகத்தை பாதுகாப்பது தொடர்பான ஒரு வெளிப்படையான கலந்துரையாடல் இருக்கும் என்றும் நான் நம்புகின்றேன். இத்தீமைகளில் சில நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்ததாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
    கல்வி மற்றும் தரமான இளைஞர் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் 2010ஆம் ஆண்டில் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இளைஞர் அபிவிருத்தி, தொழில் பயிற்சியை ஒன்றிணைத்து ஒரு முக்கிய கொள்கையை முன்னெடுத்தோம். இதன் நீண்டகால இலக்கு உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளவர்களையும் இல்லாதவர்களையும் நாட்டின் அபிவிருத்தி செயன்முறைக்கு சமமாக பங்களிப்பு செய்பவர்களாக ஆக்குவதாகும்.

    தோல்வியடைந்தவர்கள் என ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கும் நன்மைகளை விரிவாக்கும் வகையில் 'வாழ்க்கைக்காக திறன்கள் திறன்களுக்காக தொழில்கள்' என்ற நிகழ்ச்சித் திட்டத்தையும் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். பொதுநலவாய கொள்கைகளுக்கு அமைவாக பல்வேறு மானிட குழுக்களுக்கு மத்தியில் தற்போது நிலவும் வளங்களில் உள்ள இடைவெளியை குறைத்து பாரபட்சமற்ற ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இந்த முயற்சிகள் உதவும்.

    இந்த வகையில் 'இளைஞர்களும் திறன்களும், கல்வியை தொழிலுக்காக பயன்படுத்தல்' என்ற தலைப்பில் யுனெஸ்கோ நிறுவனத்தின் '2012ஆம் ஆண்டு எல்லோருக்கும் கல்வி பூகோள கண்காணிப்பு அறிக்கை' தொடர்பான கவனத்தை கொண்டுவர நான் விரும்புகிறேன். கல்விக்காக செய்யப்படும் மூலதனம் சிறந்த விளைவை கொண்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கல்விக்காக செலவிடப்படுகின்ற ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் 10க்கும் 15க்கும் இடைப்பட்ட அமெரிக்க டொலர்கள் பொருளாதார அபிவிருத்தி உருவாகிறது. மொத்த சனத்தொகையின் திறன்களை மேம்படுத்துவதற்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்துவதே மிகவும் அவசியமானதாகும் என அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. நாங்கள் இளைஞர்களுக்கு தொழில்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான திறன்களை வழங்குவதற்கு மிகுந்த அழுத்தத்தை கொடுத்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.

    எமது இளைஞர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் மற்றுமொரு முக்கிய முன்னெடுப்பாக இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தை குறிப்பிட முடியும். இந்த தனித்துவமான அடைவுடன் இலங்கை எங்கும் இளைஞர் மன்றங்கள் நிறுவப்படுவது கீழ் மட்டத்தில் இளைஞர் செயற்பாட்டாளர்களை கொள்கை வகுப்பதில் பங்கேற்கச் செய்யவும், பொதுநலவாய அமைப்பின் பெருமானங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் வினைத்திறன் வாய்ந்த ஒரு பொறிமுறையாக இது நிருபிக்கப்பட்டுள்ளது.

    பால் சமத்துவத்திற்கான அர்ப்பணம் பொதுநலவாய சாசனத்தின் முக்கிய பெறுமானங்களிலும் கொள்கைகளிலும் உள்ள ஒன்றாகும். ஆண்கள் பெண்கள் மத்தியில் சமத்துவமின்மையை இல்லாது செய்வதற்கு பொதுநலவாய நாடுகளுக்கு மத்தியிலும் பூகோள ரீதியிலும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் அரசியல் யாப்பு பால் சமத்துவத்தை மிகப் பலமாக பாதுகாத்து உத்தரவாதப்படுத்துகிறது. உலகின் முதற் பெண் பிரதமரான பண்டாரநாயக்க அம்மையாரை உலகிற்கு வழங்கிய பெருமையை நாம் கொண்டுள்ளோம். இது பால் சமத்துவத்திற்கான எமது அர்ப்பணத்தை எடுத்துக்காட்டுகிறது. ஊநுனுழு போன்ற பெண்களுக்கான சர்வதேச சமவாயங்களின் ஒரு பங்காளர் என்ற வகையில் இலங்கை சமூகத்திலோ அல்லது அரசாங்கத்திலோ பெண்களுக்கான எந்த அநீதியும் இழைக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

    இளைஞர் அபிவிருத்தி தொடர்பான எமது கொள்கையும் எம்மை நவீன தொழில்நுட்பத்துறைக்கு கொண்டு செல்கிறது. 2016ஆம் ஆண்டில் 75 வீதம் தகவல் தொழில்நுட்ப அறிவை அடைந்துகொள்வதன்பால் இலங்கை உறுதியாக முன்னேறி வருகிறது. சுகாதார சேவையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் வறுமையை ஊக்குவிக்கின்றது என்ற வகையிலும் பொதுநலவாய அமைப்பின் அடிப்படை நோக்கங்களுக்கு பாதகமாய் அமைகின்றது என்ற வகையிலும் சுகாதார பராமரிப்புக்கு சமவாய்ப்பு இருப்பது மிகவும் முக்கியமானதாகும். காசநோய், எச்.ஐ.வி (எயிட்ஸ்) மற்றும் மலேரியா போன்றன பரவுதல் எமது தேசங்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை கொண்டுவந்துள்ளது. பயங்கரமான போதைப் பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாவது பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது. புதிய தொழில்நுட்ப கருவிகள் மூலம் இளைஞர்கள் உலகத்தோடு இடைவினையாற்றும் வழிகள் விரிந்து செல்வதுடன் நவீன தொழில்நுட்பத்தை பொதுநலவாய நாடுகளின் இளைஞர்களுக்கு மத்தியில் சுகாதார பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயன்படுத்த முடியும்.

    மகிழ்வளிப்பு அம்சங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளில் அதிகரித்த முதலீடுகள் இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியத்தையும் உடல் நலத்தையும் மேலும் மேம்படுத்தும். அந்த வகையில் இந்த இளைஞர் மாநாட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் நீரிழிவு விழிப்புணர்வு நடை பவணியொன்றும் உள்ளடக்கப்பட்டிருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும்

    இளம் பிரதிநிதிகள் கடற்கரை போட்டிகளில் பங்கெடுக்க விரும்புவர். இலங்கையின் அழகான கடற்கரைகளில் விளையாடி மகிழும் சந்தர்ப்பம் இதன்மூலம் அவர்களுக்கு கிடைக்கும். இளைஞர்களது நேர்மறையான, செயலூக்கம் வாய்ந்த வகிபாகம் மற்றும் அபிவிருத்தி, சமாதானம், ஜனநாயகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அவர்கள் செய்யும் பங்களிப்புகள் மற்றும் ஏனைய கலாசாரங்களை மதிப்பது உட்பட சகிப்புத்தன்மை புரிந்துணர்வு போன்ற அடிப்படை பெறுமானங்களை ஊக்குவிப்பதில் அவர்கள் வழங்கும் பங்களிப்பு காரணமாக பொதுநலவாய சாசனம் இளைஞர்களை அங்கீகரிக்கிறது.

    பொதுநலவாய அமைப்புக்கு வழிகாட்டும் பொறுப்பு இலங்கைக்கு கிடைக்கும் அடுத்த இரண்டு வருட காலப் பகுதியில் பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதில் தங்களது இலங்கைப் பங்காளர்களுடன் ஊடாடுவதற்கான அர்த்தமிக்க சிறந்த சந்தர்ப்பங்களை பொதுநலவாய இளைஞர் பிரதிநிதிகளுக்கு வழங்குவதற்கு நாம் உண்மையிலேயே சிறந்த முயற்சிகளை மேற்கொள்வோம். இப்படி நாம் செய்வது பொதுநலவாய நாடுகளின் எதிர்கால வெற்றி இந்த தலைமுறையினரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிலும் பங்களிப்பிலும் தங்கியுள்ளது என்ற உயர்ந்த எதிர்பார்ப்பிலாகும்.
     
    இறுதியாக, 2014 மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து இலங்கை உலக இளைஞர் மாநாட்டை நடாத்தவுள்ளது என்பதை குறிப்பிடுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த மாநாடு ஆசிய நாடொன்றில் நடைபெறுவது இதுவே முதற் தடவையாகும். இந்த சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்கு எல்லா பொதுநலவாய நாடுகளையும் பொதுநலவாய அமைப்புக்கு வெளியேயுள்ள நாடுகளையும் நான் அழைக்க விரும்புகிறேன். இது எமது இளைஞர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க பெரிதும் உதவுமென நான் நம்புகின்றேன்.

    நான் உங்களைப்போன்ற ஒரு இளைஞனாக இருந்த சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு இலக்கு இருந்தது. அதனை அடைய வேண்டும் என்ற விருப்பத்திலேயே நான் எப்போதும் இருந்தேன். மிகவும் இளம் உறுப்பினராக நான் பாராளுமன்றத்திற்கு பிரவேசித்தேன். அது எந்த ஆண்டு என்று நான் உங்களுக்கு சொல்ல மாட்டேன். ஏனென்றால் நீங்கள் எனது வயதை தெரிந்து கொள்வீர்கள். கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணத்தின் ஊடாக நான் ஒரு அமைச்சராக, எதிர்க்;கட்சித் தலைவராக பிரதம அமைச்சராக இன்று எமது நாட்டின் சனாதிபதியாக முன்னேறி இருக்கிறேன். இந்த திறமை வாய்ந்த இளம் பெண் குறிப்பிட்டது போன்று நீங்களும் உங்களுடைய இலக்கை அடைந்து கொள்வதற்கான உறுதியையும் நோக்கத்தையும் பொறுமையையும் கொண்டுள்ளீர்கள் என நான் நம்புகின்றேன். பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கும் கலப்பகுதியில் நான் உங்களோடு இருந்து எல்லா சந்தர்ப்பங்களிலும் உங்களுக்கு உதவியாய் இருப்பேன் என்ற உறுதிப்பாட்டை நான் தருகிறேன்.

    நிறைவாக, இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக பல்வேறு நிறுவனங்கள் தனி நபர்களுக்கு நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, பொதுநலவாய செயலகத்தினதும் பொதுநலவாய இளைஞர் நிகழ்ச்சித் திட்டத்தினதும் அர்ப்பணத்தை நான் பாராட்டுகிறேன். இளைஞர்களினதும் அவர்களது நலனோம்புகை குறித்தும் கலந்துரையாடும் இந்த மாநாடு சிறந்த வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு ஒளிமயமானதோர் எதிர்காலம் கிடைக்கும் வகையில் உங்கள் திறன்கள் விருத்தியடையுமாக!

    உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசி கிட்டுவதாகுக! நன்றி.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒன்றிணைந்ததால் எந்தவொரு இலக்கையும் வெற்றிகொள்ள முடியும்; ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top