தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ராவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தாண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என தேர்தல் அதிகாரி சோத்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாக தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தெரிவித்ததையடுத்து சோத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக தாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு எதிராக கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்குமிடையோ மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகின்றன.நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாக தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா தெரிவித்ததையடுத்து சோத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment