
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரை
மூவாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. கல்வித் திணைக்களம் மற்றும்
பொலிஸாருக்கு எதிராக
இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா குறிப்பிட்டார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 75
வீதமானவை தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இலங்கை
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மாதாந்தம் சுமார் 500 முறைப்பாடுகள்
பதிவாவதாக ஆணையாளர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை
சேர்த்துக்கொள்வது தொடர்பில் தற்போது சுமார் 1,500 முறைப்பாடுகள் மனித
உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பதிவாகியுள்ளன. சில முறைப்பாடுகள் தொடர்பில்
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் சமரசம் ஏற்படுவதாகவும் ஆணையாளர் கலாநிதி
பிரதீபா மஹானாமஹேவா மேலும் தெரிவித்தார்.-
0 comments:
Post a Comment