• Latest News

    December 13, 2013

    வட கொரியாவின் தலைவரின் மாமாவிற்கு மரண தண்டனை!

    வடகொரியாவில் செல்வாக்கு பெற்றிருந்த ஜாங் சொங் தேக்கிக்கு அந்நாட்டு இராணுவ விசேட நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

    வட கொரியத் தலைவர் கிம் ஜோங் அன்னின், ஒரு காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்த, மாமா, ஜாங் சொங் தேக் தேசத்துரோகி என்று காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார் என்றும், தண்டனை நிறைவேற்றபட்டது என்றும் வட கொரிய அரச ஊடகம் அறிவித்திருக்கிறது.
    அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றது, ஊழல் செய்தது, மோசமான நடத்தை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டுக்கடங்காத அழிவுக்கு இட்டுசெல்லக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் மீது நடந்த ஒரு விசேட ராணுவ தீர்ப்பாய விசாரணையில், அவர் தன் மீது சுமத்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டார்.

    அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

    சாதாரணமாக ரகசியமாகவே அனைத்தும் நடக்கும் இந்த நாட்டில், இவரது வீழ்ச்சி மட்டும் பரவலாக வெளியில் சொல்லப்பட்டது.

    வெளி உலகினால் சீர்திருத்தவாதி என்று கருதப்பட்ட இவர் வெளிநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட புதிய ஒரு அரசை உருவாக்க திட்டமிட்டார் என்று அதிகார பூர்வ செய்தி நிறுவனம் அவரை விமர்சித்திருந்தது.

    அவர் கொல்லப்பட்டிருப்பது கிம் ஜோங் அன் அவர்கள் தனது நிலையை பலப்படுத்திக்கொள்ள எடுத்திருக்கும் ஒரு முயற்சியாகவே பரவலாகப் பார்க்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வட கொரியாவின் தலைவரின் மாமாவிற்கு மரண தண்டனை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top