மாத்தறை;
2014ம் ஆண்டிற்கான மாத்தறை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (13) மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த 2013.12.06 ஆம் திகதி முதன் முறையாக வரவு - செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட போது தோல்வியை தழுவிக் கொண்டது. புதிய சட்டத்தின் பிரகாரம் வரவு - செலவு திட்டம் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டால், தலைவர் பதவியை துறக்க வேண்டும். இதன்படி மாத்தறை பிரதேச சபையின் தலைவர் பதவியை துறக்க வேண்டியுள்ளார்.
0 comments:
Post a Comment