• Latest News

    October 08, 2025

    ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 இலட்சம்!!


    இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (8) 3 இலட்சத்தை எட்டியுள்ளது.

    கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை தரவுகளின் படி, இன்று ஒரே நாளில் மூன்று தடவைகள் தங்க விலை அதிகரித்துள்ளது.

    நேற்று (07) 290,500 ரூபாவாக இருந்த 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 303,400 ஆக அதிகரித்துள்ளது.
    ஒரே நாளில் மூன்று தடவைகள் அதிகரித்த தங்க விலை 

    இதற்கிடையில், நேற்று 314,000 ரூபாவாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 328,000 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று காலை - 22 கரட் ஒரு பவுன் - 296,000 24 கரட் ஒரு பவுன் - 320,000 இன்று முற்பகல் - 22 கரட் ஒரு பவுன் - 299,700 24 கரட் ஒரு பவுன் - 324,000 இன்று பிற்பகல் - 22 கரட் ஒரு பவுன் -303,400 24 கரட் ஒரு பவுன் 328,000 ஆக அதிகரித்துள்ளது.

    வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளதால் இலங்கையிலும் தங்க  விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு பவுன் தங்கத்தின் விலை 3 இலட்சம்!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top