• Latest News

    January 02, 2014

    திதுலன கல்முனை ஊடகவியலாளர்களுடனான புது வருட ஒன்றுகூடல் - 2014

    எம்.வை.அமீர், எஸ்.எல்.அப்துல்அசீஸ், எஸ்.எம்.எம்.ரம்ஸான்;
    திதுலன கல்முனை எனும் தலைப்பில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பும் புதுவருட ஒன்று கூடலும் இன்று மாலை (2014-01.01) மாளிகைக்காடு பிஸ்மில்லா ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில் கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.

    இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்தைச்சேர்ந்த பெரும்திரளான ஊடகவியலாளர்கள் வருகை தந்திருந்தனர். இப்பிராந்திய சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்கள் பலரும் இங்கு வருகை தந்து ஊடகத்துறை சார்ந்த பல்வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மீரா இஸ்ஸடீன், சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்களான  ALM.சலீம்,  M.சஹாப்தீன், UL.மப்றுக், A.முஸ்ஸம்மில் போன்றோர் ஊடகவியலாளர்களுக்கு அவர்களை வழி நடத்திச்செல்லக்கூடிய பல்வேறுபட்ட ஆலோசனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

    எனது சமூகத்தின் உரிமைகள் விடயத்தில் இறுக்கமான விட்டுக் கொடுக்காத கொள்கையை கொண்டவன்: ஹரிஸ் எம்.பி

    இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட  கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ், நாட்டின் சாத்தியமான அபிவிருத்திக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் பிரதானமானது என்றும் விசேடமாக தான் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் தான் மிகவும் நேசிப்பதாகவும் சிரேஸ்ட ஊடகவியலாளர்களில் பலர் தனக்கு சிறந்த நேர்வழிகளை காட்டியுள்ளதாகவும் அவ்வாறான நிகழ்வுகள் தனது நெஞ்சை விட்டகலாதவை என்றும் எதிர்காலத்திலும் ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் தன்னை சிறந்த பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து கருத்து வெளியிட்ட  பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்
    பெரும்பான்மை சமூகத்தினர் எவ்வாறு நாட்டை துண்டாட அனுமதிக்கப்போவதில்லையோ, தமிழ் மக்கள் அவர்களது கொள்கையை விட்டுக்கொடுக்க விருப்பமில்லையோ அதேபோன்று தானும் தான் சார்ந்த சமூகத்தின் உரிமைகள் விடயத்தில் எப்போதும் இறுக்கமான கொள்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இது விடயத்தில்ஏனைய சமூகத்தினருக்கு ஊடகங்கள் சரியான செய்தியை சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.ஊடகவியலாளர்களுடனான இச்சந்திப்பின் போது கல்முனை மாநகரசபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான  ஏ.எம்.பறக்கத்தும் பிரசன்னமாய் இருந்தார்.












    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: திதுலன கல்முனை ஊடகவியலாளர்களுடனான புது வருட ஒன்றுகூடல் - 2014 Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top