• Latest News

    January 02, 2014

    வருமானம் குறைந்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    அம்பாறை மாவட்ட சமுர்த்திக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் தொழில் முயற்சியில் ஈடுபடும் குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுறுத்த பியதாச தலைமையில் நடைபெற்றது.

    இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் அவர்களும் கௌரவ அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.விமலநாதன் , மாவட்ட சமுர்த்தி சமர்த்தி அணைப்பாளர் ஐ.அலியாh உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த துவிச்சக்கர வண்டிகள் சுத்தமான பசுப்பால் விற்பனையாளர்களுக்கும், சுகாதாரமானதும், போசாக்கானதுமான இலைக்கஞ்சி விற்பனையாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

    மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ்  இங்கு கருத்து தெரிவிக்கையில், மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்கள் இன்னும் ஏராளமானவர்கள் இருக்கின்ற போது நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தாங்கள் இந்த தொழில் ரீதியாக கொண்டுள்ள அனுபவமும் தேர்ச்சியுமாகும். இந்த தொழிலை நாளாந்தம் தொடர்ச்சியாக  நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

    உங்களது சேவையினை நாடுகின்ற மக்களுக்கு நாளந்தம் சேவைகள் சென்றடைய வேண்டும் அவ்வாறு நடைபெறுகின்றதா என்பதை கவனிக்க எமது மாவட்ட செயலகத்தினால் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வருமானம் குறைந்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top