• Latest News

    January 01, 2014

    தற்காலிக ஊழியர்களின் நலன் கருதியே அவர்கள் இடைநிறுத்தம்: கல்முனை மாநகர சபை முதல்வர்

    சஹாப்தீன்;
    ஊழியர்களின் நலன்கருதி எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையினை சிலர் பிழையாக விளங்கிக் கொண்டு அல்லது பிழையாக தெரிவித்து இதனை ஒரு பழிவாங்கலாக காட்ட முனைவதையிட்டு கவலையடைகின்றேன் என கல்முனை மாநகர சபை முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
    தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களை இடைநிறுத்தியது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
    கல்முனை மாநகர சபையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் நீடிப்பதற்கான நடைமுறைகளில் சில தெளிவின்மை இருப்பதனாலும், அவர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டிருக்கும் நியமனக்கடித்த்தின் பிரகாரம் நிரந்தர நியமனம் வழங்க முடியாத வகையில் அந்த தற்காலிய நியமனங்கள் அமைந்துள்ளன.

    இது தொடர்பாக ஆணையாளர் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்கள் மீண்டும் வேலைக்கு ஓரிரு வாரங்களுக்குள் உள்வாங்க்ப்பட இருக்கின்றார்கள். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது தொடர்பான உறுப்பினர்களின் குழுக்கூட்டம் எதிர்வரும் 08.01.2014 ம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு மாநகர சபை  முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற இருக்கின்றது.
    கல்முனை மாநகர சபையில் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டிருக்கும் ஊழியர்கள் தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழியகள் எவரையும் பழிவாங்கும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்படவில்லை என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இதைவேளை ஊழியர்களின் நலன்கருதி எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையினை சிலர் பிழையக விளங்கிக் கொண்டு அல்லது பிழையாக தெரிவித்து இதனை ஒரு பழிவாங்கலாக காட்ட முனைவதையிட்டு கவலையடைகின்றேன். அதனால் இவ்வூழியர்கள் இதனை விளங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தற்காலிக ஊழியர்களின் நலன் கருதியே அவர்கள் இடைநிறுத்தம்: கல்முனை மாநகர சபை முதல்வர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top