• Latest News

    May 04, 2026

    நடிகர் விஜய் அமோக வெற்றி! 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு


    இந்தியா  சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952ஆம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.

    1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக அறிஞர் அண்ணா பொறுப்பேற்றுக் கொண்டார்.

    1969ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின்  மறைவுக்கு பிறகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி பதவி ஏற்றார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. முதல்மைச்சராக கலைஞர் கருணாநிதி பதவியேற்றார்.

    அதன் பிறகு  திராவிட முன்னேற்றக் கழகத்தலிருந்து எம்ஜிஆர் பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். 

    1977, 1980, 1985ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  தொடர் வெற்றிகளை பெற்றது. எம்ஜிஆரே முதலமைச்சராக இருந்தார்.

    எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்  மாறிமாறி ஆட்சி அமைத்தன. அதாவது, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மறைவுக்கு பிறகு 2021ஆம் ஆண்டு, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

    இப்படி, தமிழகத்தில் 1967ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 59 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதித்தமும் முடிவுக்கு வந்துள்ளது.

    2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மும்முனைப் போட்டி உருவாகிய நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.

    முதல் முறையாக தேர்தலை சந்தித்த தமிழக வெற்றிக் கழகம் சுமார் 30 வீத வாக்குகளைப் பெற்று 108 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    ஆனால், தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்கள் மட்டுமே இருப்பதால் 'தொங்கு சட்டசபை' சூழல் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில், ஆட்சியை அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு குறைந்தது 10 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.

    இதனால், எந்தக் கட்சியிடம் ஆதரவு கோரப்படும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. 

    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுமா? அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகள் ஆதரவு தருமா? காங்கிரஸ் சில தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், அது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நடிகர் விஜய் அமோக வெற்றி! 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முடிவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top