• Latest News

    March 25, 2014

    சொக்லட்டில் பன்றியின் உருவத்தை ஒத்த உருவம்

    இன்று நாட்டில் சிறு பான்மை முஸ்லிம்களுக்கு எதிரான பலவிடையங்கள் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் அரங்கேறிவரும் இந்நிலையில் மிகுந்த நூதனமாகவும் சில விடையங்கள் நடந்து வருகின்றன.
    ஏற்கனவே ஹலால் சான்றிதழை விலக்கியுள்ள சொக்கலட் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனமொன்று அதன் சொக்லட் உற்பத்திகளில் ஒன்றான Magical Moments   எனும் உற்பத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ள சொக்லட்களில் சிலவற்றில் பன்றியின் முக உருவத்தை ஒத்த வடிவில் சொக்லட்டுக்கள்  உள்ளடக்கப்பட்டுள்ளன.

    முஸ்லிம்களாலும் பெரிதும் நுகரப்படும் குறித்த நிறுவனத்தின் உற்பத்திபொருட்களில் இவ்வாறான விரும்பப்படாத செயற்பாடுகள் நடைபெறுவது கவலையளிக்கக்கூடிய விடையமாகும். குறித்த நிறுவனம் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமானால் முஸ்லிம்களாலும் மதிக்கக்கூடிய நிலை உருவாகும்.

    இருந்தபோதும் முஸ்லிம்களால் உண்ணப்படும் உணவுகளில் அதன் ஹலால் நம்பிக்கையை உணரமுடியும் என்ற அடிப்படையில், மிகுந்த நூதன அடிப்படையிலும் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சொக்லட்டில் பன்றியின் உருவத்தை ஒத்த உருவம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top