சுலைமான் றாபி;
தற்போது அம்பாரை மாவட்டத்தில் கடலில் மீன் பிடிக்கும் காலமாகும். இந்நிலையில் இன்று (18.03.2014) காலையில் நிந்தவூர் கடலில் கொப்புறு
மீன் இனத்தினைச்சேர்ந்த மீன் ஒன்று பிடிபட்டுள்ளது. 04 அடி நீளமானதும் 140
கிலோ கிறாம் நிறையுடயதுமான இந்த மீன் இரண்டு வகைகளைக் கொண்டுள்ளதாகவும்
அதில் வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களிலே இது காணப்படுவதாகவும் மீனவர் ஏ.
சாஜஹான் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை இந்த அரியவகை மீனினம் படகுகள் மூலமாக
ஆழ்கடலுக்குச் சென்றே பிடிக்க முடியும் என்றும் அதிஷ்டவசமாக இந்த மீன்
கரைவலையில் பிடிபட்டதாகவும் இதில் ஒரு மீன் வலையினைப் பிய்த்துக் கொண்டு
தப்பிச்சென்றதாகவும், மேலும் இந்த வெள்ளை கொப்புறு மீன் ரூபா 55ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment