• Latest News

    March 18, 2014

    கண்ணில் வெள்ளை படரல் (Cataract) நோய் உள்ளவர்களுக்கான இலவச பரிசோதனை சிகிச்சை முகாம்

    எம்.வை.அமீர்,ஏ.எம்.சம்சுதீன்;
    ஜம்மியத்துஸ் ஸபாப் சமூகசேவை நிறுவனமும் சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் (தவ்ஹீத்) ஜும்ஆப் பள்ளிவாசலும் இணைந்து இன்று 2014-03-18 சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் கண்ணில் வெள்ளை படரல் (Cataract) நோய் உள்ளவர்களுக்கான இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

    குறித்த கண்ணில் வெள்ளை படரல் (Cataract) நோய் உள்ளவர்கள் அந்த நோயில் இருந்து விடுபட சிகிச்சைக்காக பெரும்தொகையான பணத்தை செலவழிக்க வேண்டியுள்ளதால் வசதிகுறைந்தோர் இவ்வாறான சிகிச்சையை செய்யாது அவதியுறுகின்றனர். இந்நிலையை கருத்தில்கொண்டு ஜம்மியத்துஸ் ஸபாப் சமூகசேவை நிறுவனத்தினர் ஒவ்வொரு பிரதேசமாக சென்று இவ்வாறான நோய்களைக் கண்டுபிடித்து குறைபாடுள்ளவர்களுக்கு இலவசமாக Lens பொருத்தி உரிய சிகிட்சை வழங்கி வருகின்றனர்.

    சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் (தவ்ஹீத்) ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் எஸ்.எம்.இனாமுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாகிஸ்தானில் இருந்து வருகைதந்த வைத்திய குழுவினர் பெரும்திரளாக வருகை தந்திருந்த நோயாளிகளை பரிசோதித்து அவர்களில் குறித்த நோய் உள்ளவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான சிகிற்சையை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.


     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்ணில் வெள்ளை படரல் (Cataract) நோய் உள்ளவர்களுக்கான இலவச பரிசோதனை சிகிச்சை முகாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top