சஹாப்தீன்;
உள்ளுராட்சி மன்றங்களினால் குப்பைகளை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டினை மேம்படுத்துவதற்காக குப்பைத் தொட்டிகள் மற்றும் திண்மக் கழிவுகளை சேகரிக்கும் பைகள் நிந்தவூர் பிரதேச சபையினால் வழங்கப்பட்டு வருகின்றன.
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலாக மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில், முதற் கட்டமாக நிந்தவூர் 24ம், 25ம் பிரிவில் உள்ள சமூர்த்தி பயனாளிகளுக்கு குப்பைத் தொட்டிகள் மற்றும் திண்மக் கழிவுகளை சேகரிக்கும் பைகள் நிந்தவூர் பிரதேச சபையினால் நேற்று (31.03.2014) மாலை வழங்கப்பட்டன.
இதன் போது, நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.எம்.றியாஸ் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட பொது மக்கள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.
+copy.jpg)








0 comments:
Post a Comment