• Latest News

    May 16, 2014

    பாஜக கூட்டணியினர் 333: மோடி இந்தியாவின் புதிய பிரதமர்

    நடைபெற்று முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அறுதிப் பெறும்பான்மையைப் பெற்று இந்துத்துவா மதவாத கட்சியான பாரதிய
    ஜனதாக் கட்சி ஆட்சியமைக்கிறது. இந்நிலையில், இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடி தெரிவாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.என இந்திய தகவல்கள் குறிப்பிடுகிறது .
    543 ஆசனங்களைப் பெறுவதற்காக, மாநில மட்டங்களில் கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற்று, இன்றைய தினம் வாக்கெண்ணும் பணிகள் தொடங்கின. ஆரம்பம் முதலே பாஜக கூட்டணியின் கை ஓங்கியிருந்தது. 543 ஆசனங்களில் பாஜக கூட்டணியினர் 333 ஆசனங்களை தமதாக்கிக் கொண்டுள்ளனர். இதில், பாரதிய ஜனதா கட்சி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான 272 ஆசனங்கள் என்ற அறுதிப் பெரும்பான்மையையும் தாண்டி, 278 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். இதனால், கூட்டணி இல்லாமலே, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் தகுதியை பாரதிய ஜனதாக் கட்சி பெற்றிருக்கிறது.
    பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு வழங்கிய, ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்- தமிழகத்தில் பெரு வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக 36 ஆசனங்களை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
    தற்போதைய ஆளும்கட்சியான இந்திய காங்கிரஸ் கட்சி, இத்தேர்தலில் படுதோல்வியடைந்திருக்கிறது. காங்கிரஸை் கூட்டணியினர் மொத்தமாக 61 இடங்களை மாத்திரமே பெற்றிருக்கின்றனர். இதில், சோனியா காந்தியின் இந்திய காங்கிரஸ் 48 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருக்கிறது.
    குஜராத் முஸ்லிம் படுகொலைகள் தொடர்பில் மோசமான குற்றசாட்டுக்களை எதிர்கொண்ட மோடி தற்போது இந்தியாவின் பிரதமராவது உறுதி செய்யப்பட்டுள்ளது .

    மோடிக்கு மகிந்த வாழ்த்து: இலங்கைக்கு  வருமாறு அழைப்பு

    இந்தியப் பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்கவுள்ள பா.ஜ.க.வின் தலைவர் நரேந்திர மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அரசு முறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
    பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இன்று நண்பகல் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

    மோடிக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து:-

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.
    ”உங்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி கண்டிருக்கும் இந்த மகத்தான தேர்தல் வெற்றி, இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை எனலாம். பலம்பொருந்திய ஒரு அரசாங்கத்தை அமைக்கப்போகும் நீங்கள் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றினைக் காண்பதற்கான உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுறுதியுடைய பங்களிப்பை வழங்குவீர்கள் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
    இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதிகிட்ட உங்கள் தலைமையிலான அரசாங்கம் ஆரோக்கியமான கொள்கை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என நான் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றேன்.”
    இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பாஜக கூட்டணியினர் 333: மோடி இந்தியாவின் புதிய பிரதமர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top