• Latest News

    July 09, 2014

    நீதி மன்றம் எம்மைக் கட்டுப்படுத்த வந்தால் வீடுகள் சிறைச்சாலைகளாகும், மரங்கள் தூக்கு மேடையாகும் – ஞானசார தேரர்!

    நீதி மன்றத்திலிருந்து என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும் எமது செயற்பாட்டை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். எம்மை இவ்வாறு கட்டுப்படுத்த வந்தால், இந்த நாட்டிலுள்ள அனைத்து வீடுகளும் சிறைச்சாலைகளாக மாறும். சகல மரங்களும் தூக்கு மேடைகளாக மாறும் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்க அறிவித்தல் விடுத்தார்.

    அல்குர்ஆனை அவமதித்தமை, ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து குழப்பியமை தொடர்பில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதன்போது, நீதி மன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணிகளின் செயற்பாடுகளுக்கு தடங்கள்களை ஏற்படுத்தக் கூடாது என நீதிபதியினால் தேரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    வழக்கு விசாரணையில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.

    இந்த நாட்டில் என்ன நடைபெறுகின்றது என்பதில் சகலரும் கூடிய அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் தேரர் நீதி மன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீதி மன்றம் எம்மைக் கட்டுப்படுத்த வந்தால் வீடுகள் சிறைச்சாலைகளாகும், மரங்கள் தூக்கு மேடையாகும் – ஞானசார தேரர்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top