• Latest News

    July 08, 2014

    முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொன்விழாவை முன்னிட்டு கல்விமான் ஷாபி மரிக்கார் நினைவாக முத்திரை

    முஸ்லிம் கல்வி மேம்பாட்டுக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றிய கல்விமான் மர்ஹூம் எஸ்.எல்.எம். ஷாபி மரி;க்காரின் நினைவாக முத்திரை வெளியிடப்பட உள்ளது.

    அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொன்விழாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இதனை வெளியிட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முஸ்லிம் கல்வி மாநாட்டின் உப தலைவரும், தகவல் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பீயுமான ஏ.எச்.எம். அஸ்வரை முன்னிலைப்படுத்தி இந்த தபால் முத்திரை வெளியீட்டுப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென்றும் முடிவாகியுள்ளது.

    மர்ஹூம் ஷாபி மரிக்காரின் நினைவாக ஒரு பாடசாலைக்கோ அல்லது அசெம்பிளி கூட்ட மண்டபத்துக்கோ அவரின் பெயர் சூட்டப்பட வேண்டும்.

    ஒரு சனசமூக நிலையம், ஒரு நூலகம், ஒரு பொது மண்டபம், அல்லது ஒரு வீதிக்கு அவரின் பெயரை இட வேண்டுமென்றும் அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    எதிர்வரும் 2014 ஒக்டோபர் 25ம் திகதி அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டுக்கு ஐம்பது ஆண்டுகள் நிறைவாகின்றன.

    டாக்டர் தாஸிம் அகமது தலைமையில் பொன்விழா ஏற்பாட்டுக் குழுவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.; அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தவிசாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ், பொதுச்செயலாளர் சட்டத்தரணி அல்ஹாஜ் ரஷீத் எம். இம்தியாஸ், உப தவிசாளர்களான அல்ஹாஜ். என்.எம். அமீன், அல்ஹாஜ். சூபி இஸ்மயில், சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ். எப்.எம். பைரூஸ் (பொன்விழா மலர் ஆசிரியர்) ஆகியோர் பிரதான குழுவுக்கும், மௌலவி.ஏ.எல்.எம். இப்ராஹிம், மூத்த ஊடகவியலாளர் ரஷீட், எம். ஹபீல், அல்ஹாஜ். முபாரக் அலி, அல்ஹாஜ். பைஸல் பலீல், அல்ஹாஜ். ஹஸன், கொழும்பு கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் ஜனாப். எம்.ஐ.எஸ். ஹமீத் ஆகியோர் உப குழுவுக்கும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்பொன்விழாக்குழுவில் மேலும் சில பெண் உறுப்பினர்களையும் தெரிவு செய்து இணைத்துக்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொன்விழாவை முன்னிட்டு கல்விமான் ஷாபி மரிக்கார் நினைவாக முத்திரை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top