முஸ்லிம்கள் அடக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு
பாக்தாத்: முஸ்லிம்களின் உரிமைகளுக்காக இந்தியா மீது போர் தொடுக்கப்படும்
என ஈராக்கில் கிளர்ச்சி செய்து வரும் சன்னி தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்
விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரமலான் விரதத்தை ஒட்டி
இந்த அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் விடுத்துள்ள செய்தியில் இந்த
மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, எகிப்த், சீனா,
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக
அல் பாக்தாத்தி தமது செய்தியில் கூறியுள்ளார்.
புனித ரமலான் மாதத்தில் போர் செய்வது தடுக்கப்பட்ட போதிலும், தமது உரிமைகளை காப்பாற்ற முஸ்லிம்கள் ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடுகளில் முஸ்லிம்கள் தேவையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஈராக்கில் ஆட்சியை பிடித்த பிறகு இந்த நாடுகள் மீது போர் தொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இதனிடையே பாக்தாக்கில் இருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

0 comments:
Post a Comment