• Latest News

    July 04, 2014

    மட்டு. போக்குவரத்து பொலிஸாருக்கு அதிவேக மோட்டார் சைக்கிள்!

     மட்டக்களப்பு மாவட்டத்தில்  அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காகவும் மற்றும்  மக்களிற்கு இடையூறு அற்ற போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கோடு புதிய நவீன் மோட்டார் பைசிக்கிள்கள் வழங்கும் நிகழ்வு இன்று  மட்டக்களப்பு பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்றது.

    24 மணிநேரமும் அதிவேக வீதிகளில் போக்குவரத்து விதிகளைக் கண்காணிப்பதற்காக அதிவேகத்தில் பயணிக்கத்தக்க ( 600 CC ) ஒவ்வோன்றும் தலா 36 இலட்சம் பெறுமதியான 12 மோட்டார் பைசிக்கிள்கள் மட்டக்களப்பு புதிய பொலிஸ் ரோந்துப்  பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

    கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் வழிகாட்டலின் கீழ் அமைக்கப்பட்ட இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்போது புதிய ரோந்துப்பிரிவின் கடமைகளும் பொறுப்புக்களும் பற்றி மட்டக்களப்பு அம்பாரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரெட்ண விளக்கமளித்தார்.

    மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் வீதிப் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மட்டு. போக்குவரத்து பொலிஸாருக்கு அதிவேக மோட்டார் சைக்கிள்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top