சீனாவின் காஸா Xinjiang என்றால்
அது மிகையல்ல. சீனப்பெருந்தேசத்தின் வடமேற்கு மாநிலம். மொத்த தேசத்தின்
இயற்கை கனிய வளங்களில் பெரும்பகுதி இங்கு தான் உள்ளது. தலைநகர்
உரும்கியில் மீண்டும் ஒரு இன வன்முறை நிகழும் சூழலில் சீன அரசு தனது
ஆயுதப்பொலீஸ் படை பிரிவினையும், கலகமடக்கும் படைப்பிரிவினையும் அங்கு
நிறுத்தியிருந்தது. ஜார் மன்னர் ஆட்சிக்காலம் முதல் செச்னிய மக்கள்
நசுக்கப்படுவது போலவே இங்கும் நிலைமைகள் உள்ளன. இப்போது மேலும்
பல்லாயிரக்கணக்கான ஆயுதப்படையினர் Xinjiang-கின் பல பாகங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்பு
இல்லாத அளவிற்கு சீன அரசின் காவலர்கள் ஒரு இராணுவ வேலியை அமைத்து திறந்த
வெளிச்சிறைச்சாலை போலவே இங்குள்ள மக்களை வாழ அனுமதித்துள்ளனர். இதற்கு
காரணம் இல்லாமலும் இல்லை. சிரியாவின் சமர்களத்தில் Xinjiang முஸ்லிம்ளின்
ஒரு அணி களமாடி வருகிறது. இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இலும், ஜபாஃ
அல்-நுஸ்ராவிலும், எப்.எஸ்.ஏ. யிலும் இணைந்து சண்டையிட்டிருந்தனர். பின்னர்
இவர்களில் பலர் ஐ.எஸ்.ஐ.எஸ். இடம் பையா எனும் உறுதிப்பிரமாணம் எடுத்து
இணைந்து விட்டனர்.
I.S.I.S. பல முறை சீன முஸ்லிம்களின் மீதான அரச அடக்கு முறைகள் பற்றி கண்டனம் வெளியிட்டதுடன் வெகு விரைவில் Xinjiang-கில் புனிதப் போர் ஆரம்பமாகும் என்று கூறியிருந்தனர். அப்போது அராபிய போராளிகள் Xinjiang போராளிகளிற்கு நன்றியுடையவர்களாக களம்புகுவர் என்றும் தெரிவித்திருந்தனர். இது சீன அரசிற்கு விருப்பமான வார்த்தைகள் அல்ல.
சீன அரசு ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் மிகக்கடுமையான சட்டங்களை Xinjiang-கில்
அமுல் செய்வது வழமை. ரமழானில் தராவீஹ் தொழுவது முதல் கூட்டாக இப்தார்
செய்வது வரை அவர்கள் அதனை தேச விரோத சட்டம் என்று தடை செய்திருந்தனர்.
இப்போது அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று அரச ஊழியர்களும், பாடசாலை
மாணவர்களும் நோன்பு பிடிக்க முடியாது என சட்டம் போட்டுள்ளனர்.
கடந்த வருடமும் இந்த வருடத்திலும் பல உய்க்குர் முஸ்லிம்கள் தேசத்துரோகிகள் என்ற பெயரில் தலையில் சுட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். Xinjiang இந்த காட்சியை பல நாட்கள் சீன அரச சார்பு தொலைக்காட்சி சேவைகள் விடாமல் ஒளிபரப்பு செய்து வந்தன. முழு முஸ்லிம்களையும் தங்கள் கம்யூனிச இராணுவ பூட்ஸ்களின் கீழ் அச்சத்தில் வைத்திருப்பதே ஆட்சியாளர்களின் நோக்கம்.
கடந்த வருடமும் இந்த வருடத்திலும் பல உய்க்குர் முஸ்லிம்கள் தேசத்துரோகிகள் என்ற பெயரில் தலையில் சுட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். Xinjiang இந்த காட்சியை பல நாட்கள் சீன அரச சார்பு தொலைக்காட்சி சேவைகள் விடாமல் ஒளிபரப்பு செய்து வந்தன. முழு முஸ்லிம்களையும் தங்கள் கம்யூனிச இராணுவ பூட்ஸ்களின் கீழ் அச்சத்தில் வைத்திருப்பதே ஆட்சியாளர்களின் நோக்கம்.
முஸ்லிம்கள் மீதான சீன அரசின் ஏதேச்சாதிகார ஒடுக்கு முறையை யாரும் கண்டிப்பதில்லை. இதனை Indonesian Ulema Council (MUI) இன்று வன்மைகயாக கண்டனம் செய்துள்ளது. மதச்சுதந்திரம் தொடர்பான மனித உரிமைகளை சீன அரசின் Chinese Communist Party (CCP) மிக மோசமாக மீறியுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
Xinjiang-கில்
சீன அரசு ஒரு இனச்சுத்திகரிப்பை செய்து வருகிறது. முஸ்லிம்களிற்கு எதிராக
மிக மோசமான சட்டங்களை அது தாராளமாக பயன்படுத்துகிறது. Xinjiang இன்னொரு
திபெத்தாக மாறி விடக்கூடாது என்பதே சீன அரசின் அச்சம். இரும்புத்திரை
நாடான சீனாவின் இந்த மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்கு தெரிய வருவது
அரிது. இணையங்கள் முற்றாக சீன அரச உளவு ஸ்தாபனங்களினால்
கண்காணிக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment