• Latest News

    November 23, 2014

    ஆளும் கட்சி 4 மாகாண சபைகளை இழக்கும் ஆபத்து?

    அரசாங்கத்தில் இருந்து 28 பேர் வெளியேறலாம் என அரசாங்கம் கணக்கீட்டுள்ளதாக தெரியவருகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் 28 பேர் அரசாங்கத்தில் இருந்து விலகிச் செல்வதால் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையுமில்லை என பிரதமர் டி.எம். ஜயரத்ன கூறியுள்ளார்.

    இதனிடையே நான்கு மாகாண சபைகளின் ஆட்சி அதிகாரம் அரசாங்கத்தின் கைவிட்டுச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வடமேல், மத்திய, ஊவா, வடமத்திய மாகாண சபைகள் ஆளும் கட்சியின் கையை விட்டுச் செல்லக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆளும் கட்சி 4 மாகாண சபைகளை இழக்கும் ஆபத்து? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top