நேற்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட
கூட்டத்தில் பொதுபல சேனா இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் கிரம விமலஜோதி தேரர்
பங்கு பற்றி உரையாற்றியுள்ள நிலையில் பொதுபல சேனா இயக்கம் பங்கேற்கவில்லை எனத் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை
இல்லாதொழிக்க வேண்டுமென கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடி
கொடுக்கும் நோக்கில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைப்புக்கள் கொழும்பு
சுகதாச அரங்கில் கூட்டமொன்றை நடத்தியிருந்தது.
கிரம விமலஜோதி தேரர் இந்தக் கூட்டத்தில்
பங்கேற்றிருந்தார். அவர் ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளதாக சில
ஊடகங்கள் தெரிவித்துள்ள ஆனால் அவர் பொது பல சேனா அமைப்பினை
பிரதிநிதித்துவம் செய்து கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதையும் இந்த
கூட்டத்தில் கலந்து கொள்ள எமக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அவர்
பௌத்த கலாச்சார மையத்தின் ஸ்தாபகர் என்ற ரீதியில்தான் இந்தக் கூட்டத்தில்
பங்கேற்றிருந்தார் என பொது பல சேனா அதன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது
நிறைவேற்று அதிகார ஜனாதிபதித்துவா
முறைக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் அமைச்சர் விமல் வீசவன்சா , பொதுபல
சேனா இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் கிரம விமலஜோதி தேரர் ஆகியோரின் தலைமையில்
இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.என சில பிரதான ஊடங்கள் மூலம்
தகவல்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த முரண்பாடு பொது பல சேனாவுக்குள்
இருக்கும் தலைமைத்துவ முரண்பாட்டை வெளிப்படுதுவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. மறுபுறத்தில் ஜாதிக ஹெல உறுமைய அரசாங்கத்தில்
இருந்து வெளியேறுவது உறுதி என்றும் பொது பல சேனா அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க
கூடிய வாய்ப்பு ஆதிகம் இருபதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஜாதிக ஹெல உறுமைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் கடும்போக்கு
பொது பல சேனாவின் ஆதரவை ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதிக்கு
பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஆளும் தரப்புக்கு முயன்றுவருவதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
