• Latest News

    November 15, 2014

    இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு- இலங்கைக்கு ஆபத்து இல்லை

    இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 1 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழ வாய்ப்பு உள்ளது. பிலிப்பைன்ஸ், பபுவா நியூகினியா ஜப்பான், தைவான் மற்றும் தென்பசிபிக் தீவுகளை சுனாமி தாக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் பற்றிய தகவல்கள் வெளியாகாத நிலையில், முதல் சுனாமி அலை அடுத்த 6 மணி நேரங்களில் எழலாம் என்றும் ஆரம்ப அலைகள் பெரியதாக இல்லாமல் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு எதுவித ஆபத்தும் இல்லை

    இந்தோனேசியா அருகில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு ஆபத்தில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்தோனேசியாவின் கிழக்கு கடற்படுகையில் 7.3 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து அதனை அண்டிய நாடுகளான இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் தென் பசுபிக் தீவுக் கூட்டங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எதுவித ஆபத்தும் இல்லை என்றும் வானிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு- இலங்கைக்கு ஆபத்து இல்லை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top