• Latest News

    November 14, 2014

    முகா – அரசு நேற்று சந்திப்பு ; பேச்சு வெற்றி என்கிறார் சுசில்

    முஸ்லிம் காங்கிரஸூக்கும் – அரசுக்கும் இடையிலான முதலாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று பாராளுமன்ற கட்டடிடத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

    ஐ.ம.சு.க பொதுச்செலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம செஜயந்தவும் – முகா செயலாளர் நாயகம் ஹஸன் அலிக்கும் இடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

    பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள முகா தலைவரின் அமைச்சு அறைக்கு சமுகம் அளித்த அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த அப்போது அங்கிருந்த தலைவர் ஹக்கீமுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு ஹக்கீமின் வேண்டுகோளுக்கு அமைய ஹஸன் அலி இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

    பாராளுமன்றத்தில் வைத்து முகா தலைவரை சந்தித்த அமைச்சர் சுசில் தங்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

    இதற்கு பதிலளித்த ஹக்கீம் – எனது அமைச்சுக்கு வாருங்கள் ஹஸன் அலியும் அங்குதான் இருக்கிறார். உங்களுடன் பேச்சு நடத்த அவரை அனுப்பிவைக்கின்றேன் என கூறியுள்ளார்.
    இதற்கிணங்கவே சற்று தாமதித்து அமைச்சர் சுசில் தலைவர் ஹக்கீமின் அமைச்சு அறைக்கு சென்றிருந்தார்.

    இது எதையுமே அறிந்திராத முகா செயலாளர் ஹஸன் அலி – ஹக்கீமின் உள்நோக்கம் புரியாதவராக சுசிலுடன் பேச்சு நடத்த சென்றிருந்தார்.

    குறித்த  பேச்சுவார்த்தை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் உள்ள அமைச்சர் சுசிலின் அமைச்சு அறையில் இடம்பெற்றது.

    ஹஸன் அலிக்கும் சுசிலுக்கும் இடையிலான மேற்படி முதலாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது – ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறு சுசில் விடுத்த வேண்டுகோளை ஹஸன் அலி இச்சந்திப்பின்போது மனதார ஏற்றுக் கொண்டார்.

    சுமார் அரைமணிநேரம் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தை சுமுகமாக இடம்பெற்றதாகவும் முகாவுடனான முதற்கட்ட பேச்சு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் சுசில் இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பதற்கு முன்னர் ஜனாதிபதியுடனும் சுதந்திரக் கட்சி உயர்மட்டத்திடனும் முகா வை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வர ஹஸன் அலி இதன்போது உறுதியளித்துள்ளார்.

    நேற்று இரவு 07 மணிக்கு எமது இணையத்தளத்தில் பிரசுரம் செய்யப்பட்ட ‘இறுக்கமான கொள்கையிலிருந்து ஹஸன் அலி தளர்ந்தார். இதன் பின்னணி என்ன’ என்ற செய்தி -குறித்த இந்த சந்திப்பின் மூலம் மேலும் உறுதி செய்யப்படுகின்றது.

    ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்தவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களின் கருத்தை அறியும் கூட்டம் அண்மையில் அட்டாளைச் சேனையில் இடம்பெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து குறித்த கூட்டத்தை ஹஸன் அலி புறக்கனித்தும் இருந்தார். இந்த நிலையில் அவரது இரட்டை முகம் இச்சந்திப்பின் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளதாக உயர் பீட உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

    ஜனாதிபதித் தேர்தலின்போது மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என்ற ஹக்கீமின் நிகழ்ச்சி நிரலுக்கு ஹஸன் அலியும் ஒத்திசைவாக தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளதன் மூலமும் – மகிந்தவுக்கு ஆதரவளிக்க அமைச்சர் சுசிலிடம் இணக்கம் தெரிவித்ததன் மூலமும் ஹஸன் அலி பெரும் வரலாற்றுத் தவறு ஒன்றை செய்துள்ளார் என்றும் குறித்த உயர்பீட உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

    அமைச்சர் சுசிலுடன் பேச்சு நடத்திவிட்டு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள ரவூப் ஹக்கீமின் அமைச்சு அலுவலகத்திற்கு வருகை தந்த ஹஸன் அலி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டதுடன் அரசுக்கு சார்பான கருத்துக்களை முன்வைத்தும் அங்கு இருந்தவர்களுடன் கலகலப்பாக உரையாடியுள்ளார்.
    SRILANKAMUSLIM.LK
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முகா – அரசு நேற்று சந்திப்பு ; பேச்சு வெற்றி என்கிறார் சுசில் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top