அரசாங்கத்தை அமைக்கும் உரிமை நாட்டு மக்களுக்கே இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்க இன்றைய அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளின் ஊடாக சிலர் இலங்கையில் அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றனர். மக்களின் உரிமைகளை வேறு எவருக்கும் வழங்க தயாரில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
சிறு றப்பர் தோட்ட உரிமையாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று மதியம் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ஐக்கியமாக கட்சிக்குள் தலைமைத்துவம் ஒன்றை தெரிவு செய்து கொள்ள முடியாதவர்களுக்கு நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியாது.
மக்களும் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது. நாட்டை அபிவிருத்தி செய்து நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்த இன்றை3ய அரசாங்கம் என்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment