• Latest News

    December 02, 2014

    கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அமர்வை நேற்று மாலை 7.30 வரை ஒத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக சபைத் தவிசாளர் ஆரியவத்தி கலப்பத்தி தெரிவிக்கிறார்.

    எனினும் சபை நடவடிக்கைகளை இரவு 8 மணி வரை தொடர்வதற்காக 30 நிமிட நேரத்தை கோரியபோதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு இணங்காததால் சபையை இன்று காலை வரை ஒத்திவைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இன்று வழமைபோன்று சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது, இரண்டு தரப்பினரும் நேற்றைய சம்பவங்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதாக ஆரியவத்தி கலப்பத்தி கூறுகிறார்.

    பொருத்தமற்ற வகையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதால் தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சபை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைத்து சபையிலிருந்து வெளியேறியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜானதிபதி தேர்தல் ஜனவரி மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top