• Latest News

    December 01, 2014

    மகிழ்ச்சி நிரந்த ஆரோக்கியமான வாழ்க்கைக்கு குடும்பத்தை திட்டமிடுவோம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு

    எம்.வை.அமீர்:
    முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் காரைதீவு மகளிர் நிலையத்தின் சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் காரைதீவு விழிப்புக்குழு ஏற்பாடு செய்திருந்த இன விருத்தி சுகாதாரம் மற்றும் பெண்கள், சிறுவர்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வும் இது தொடர்பான பேரணி மற்றும் வீதி நடனம் என்பன சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் சாய்ந்தமருதில் உள்ள இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

    இதில் கிழக்கு மாகாண பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அதேவேளை வளவாளராக டாக்டர் ஏ.எல்.எம்.பாறுக் கலந்து கருத்துரை வழங்கினார்.

    அதிதிகளாக இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப், ஓய்வுபெற்ற அதிபர் ஏ.செயின்,பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.சாஜித்,மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.ரிஸ்வானுள் ஜன்னாஹ் மகளிர் கிராமிய முகாமையாளர் ஏ.எம்.எஸ்.ஜுமானா போன்றோரும் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்வில் அஸ்வான் மௌலானா குழுவினரால் விதியோர நாடகமும் நடத்தப்பட்டது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மகிழ்ச்சி நிரந்த ஆரோக்கியமான வாழ்க்கைக்கு குடும்பத்தை திட்டமிடுவோம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top