சிராஜ்:
எதிர்க்கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் விகாரமாதேவி பூங்கா திறந்தவெளியரங்கில் கைச்சாத்திடப்பட்டது.
காலை 10.20 எனும் சுப நேரத்தில்
எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முதலாவதாக இந்த புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
அதனையடுத்து எதிர்க்கட்சிகளின் பொது
வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத்
பொன்சேக்கா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.
கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி
மாதுலுவாவே சோபித தேரருக்கு முன்னாள் இந்த கையெழுத்திடும் நிகழ்வு
நடைபெறுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

0 comments:
Post a Comment