• Latest News

    December 01, 2014

    ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர் தலைமையிலான எக்சத் லங்கா பெரமுன மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு

    எம்.எம். சுஹைர்
    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈரானின் முன்னாள் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர் தலைமையிலான எக்சத் லங்கா பெரமுன (ஐக்கிய மக்கள் முன்னணி) பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.

    இதற்கமைய ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள பொது எதிர்க்கட்சி முன்னணியின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எக்சத் லங்கா பெரமுன சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் கைச்சாத்திட்டார்.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறை போட்டியிட முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்ததுடன் 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக சுஹைர் செயற்பட்டார்.

    இந்த நிலையிலேயே இவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக இவர் தேசிய சூறா கவுன்சிலின் பிரதி தலைவர் பதவியினை நேற்று ஞாயிற்றுக்கிழமை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.-TC

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர் தலைமையிலான எக்சத் லங்கா பெரமுன மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top