இருளில்
இருந்து வெளிச்சத்தை நோக்கி வரவேண்டிய யுகம் வந்திருப்பதாக ஜனாதிபதி
மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள்
சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
தாம் கிளிநொச்சிக்கு வருகைத் தரும் ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் மாற்றங்களை காணக்கூடியதாக இருந்தது. கடந்த முறை வரும்
போது வீதி விளக்குகள் அனைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இந்த விளக்குகளுக்கு வெளிச்சமூட்டுமாறு தாம் அதிகாரிகளுக்கு பரிந்துரைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், தங்களின் பிள்ளைகள்
வெளிநாடுகளில் கல்வி கற்கின்ற, வெளிநாட்டு வாசத்தை விரும்புகின்ற
தலைவர்களால், வடக்கு கிழக்கில் உள்ள மக்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை
புரிந்து கொள்ள முடியாது.
எனவே மக்கள் பழைய விடயங்களை மறந்து, தம்முடன் இணைந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் இதன் போது கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment