சிராஜ்:
மக்கள் அனைவரும் பேதங்களைத் தவிர்த்து ஒரே
பாதையில் பயணிக்க வேண்டுமென எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் பொது எதிரணியின்
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும்போதே மைத்திரி இதனை தெரிவித்தார்.
அத்துடன், சவால்களை எதிர்கொள்ளும் இந்த
தருணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு, என் மீது நம்பிக்கை வைத்துள்ள
மக்களை நான் மதிக்கிறேன். மக்களின் நம்பிக்கையை நான் நிறைவேற்றுவேன் என இத்
தருணத்தில் உறுதியளிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment