• Latest News

    March 05, 2015

    குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் -மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்ததான முகாம் (படங்கள்.)

    (பழுலுல்லாஹ் பர்ஹான்)
    மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-04ம் குறிச்சி பகுதியில் இயங்கிவரும் குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்ததான முகாம் 05-03-2015 இன்று வியாழக்கிழமை குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

    குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இவ் மாபெரும் இரத்ததான முகாமில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் ,காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் அஷ்ஷெய்க் ஜிப்ரி (மதனி) உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள் ,இளைஞர் யுவதிகள்,ஊர் பிரமுகர்கள், குபா ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

    இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்  டாக்டர் விவேக்கினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.

    மேற்படி மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாமில் சமூக தொண்டர் சேவை பணிகளை காத்தான்குடி (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் மேற்கொண்டிருந்தது.

    குறித்த மனித நேயம் பேணும்; இரத்ததான முகாம் குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் 2வது மாபெரும் இரத்ததான முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.













    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: குபா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் -மனித நேயம் பேணும் 2வது மாபெரும் இரத்ததான முகாம் (படங்கள்.) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top