
நிந்தவூரில் அரசியல் போட்டியை தவிர்த்தல் என்ற மகுடத்தின் கீழ் பக்கச் சார்பானதொரு அரசியல் நடவடிக்கை ஒன்றினை நிந்தவூர் தூய நகர அமைப்பினர் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நிந்தவூரிலிருந்து முன்னாள் அமைச்சர் பைசால் காசிம் முஸ்லிம் காங்கிரஸின் சார்பிலும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் (அஸ்ரப்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலும் போட்டியிட இருக்கின்றார்கள்.
இவர்களிடையே போட்டித் தவிர்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் நிந்தவூரில் உள்ள அரசியல் பிரமுகர்களான பைசால் காசிம், தாஹீர், உதவித் தவிசாளர் வை.எல்.சுலைமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் ஆகியோர்களிடையே பேச்சுக்களில் நிந்தவூர் தூய நகர் அமைப்பினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் இவ்வாறு பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டாலும், இறுதி இலக்காக முன்னாள் அமைச்சர் பைசால் காசிமை மாத்திரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்வதாகவே இருக்கின்றது. குறிப்பாக தவிசாளர் தாஹீரை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது செய்வதற்கே பேச்சுக்களை மேற்கொண்டுள்ளார்கள்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது நிந்தவூர் மக்கள் இரு அணிகளாக பிரிந்து நின்றார்கள். இதன் போது இரு அணிகளையும் ஒற்றுமைப்படுத்தி இருக்க வேண்டும். அன்று அதனைச் செய்யவில்லை. பிரதேச சபைதேர்தல் பிரச்சார மேடைகளில் மிக மோசமான பிரச்சாரங்கள் நடைபெற்ற போது அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பிரதேச சபைத் தேர்தலில் போட்டி தவிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மேலும், தூயநகர அமைப்பினர் நிந்தவூரில் ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பின்னர் செயல் இழந்து நின்றார்கள். தமது அமைப்பினை தொடர்ந்து முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதிருந்து விட்டு, பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமது அமைப்பின் செயற்பாட்டை தூசி தட்டி கொள்வதற்கு பதிலாக , அரசியல்வாதிகளை ஒற்றுமைப்படுத்தல் என்ற போர்வையில் கையில் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீரை அமைதியாக இருக்குமாறும், பிரதேச சபைத் தேர்தலில் தாஹீரை தவிசாளர் வேட்பாளராக நிறுத்துவது என்றும் நிந்தவூரிலுள்ள ஓய்வு பெற்ற ஒரு சில அதிபர்களும், பதவியிலுள்ள கிராம சேவக உத்தியோகத்தர்களும் ஈட்பட்டார்கள். தாஹீர் பைசால் காசிமுக்கு எதிராக செயற்படுவதில்லை என்று உறுதி கூறி அதன்படி செயற்பட்டார். தேர்தல் முடிந்தததும தாஹிருக்கு முஸ்லிம் காங்கிரஸில் டிக்கட கொடுக்க விடமாட்டோம் என்று பைசால் காசிம் தெரிவித்தார். ஆதலால், பேச்சுவார்த்தை என்பது ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளும் நாடகமாகும்.
இதே வேளை, தாஹீரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இந்த அமைப்பினர் கோர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அப்படியாக இருந்தால் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் அரசியல் எதிர் காலம் என்னவென்று கேட்கின்றோம்.
இந்த கட்டுரையாளர் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
ReplyDeleteஇந்த கட்டுரையாளர் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
ReplyDelete