தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்
ஒருவரும் அவரது 8 வயது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து
பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள தமது பெற்றோரை பார்க்கவென பிரான்ஸில் இருந்து வந்த ஜெயகணேஸ் பகீரதி என்ற பெண்ணும் அவரது 8 வயது மகளான ஜெயகணேஸ் பகலவி ஆகியோருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகீரதி என்ற பெண் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என்றும் அவர் பிரான்ஸில் திருமணம் முடித்த ஜெயகணேஸ் என்பவர் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரித்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பகிரதிக்கும் ஜெயகணேசிற்கும் இடையில் விவாகரத்து ஏற்பட்டு தற்போது பகிரதி தனது மகளுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும் மகளின் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள தனது பெற்றோரை பார்வையிட வந்து மீண்டும் பிரான்ஸ் செல்ல இருந்தபோதே கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை கைது செய்யப்பட்ட பகிரதியும் பகலவியும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment