• Latest News

    March 25, 2015

    எதிர்கட்சி தலைவர் பதவியை ஈடு வைக்க இடமளிக்காதீர்கள்: பாராளுமன்றத்தில் விமல்

    ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக செயற்படுவது தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார்.
    இப்படியான கொள்ளைகளை கடந்த அரசாங்கமும் பின்பற்றியிருந்தால் அந்த அரசாங்கத்திற்கு 150ற்கும் மேற்பட்ட ஆசனங்கள் இருந்திருக்கும், அப்பொழுது அந்த அரசாங்கத்தை ஏகாதிபத்திய அரசாங்கமாக பார்க்கப்பட்டது, அவ்வேளையில் இதே முறைமையை மகிந்த அரசாங்கம் பின்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும்?
    இறுதியில் 47 பாராளுமன்ற உறுப்பினர்களே எதிர்கட்சி தலைவருடன் இருந்தார்கள். அதன் போது 50 பேரை இந்த பக்கம் அனுப்பியிருந்தால் அந்த 50 பேரில் ஒருவரை எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்ய இடமளிப்பீர்களா? அவ்வாறு எதிர்கட்சி தலைமை பதவினை தெரிவு செய்ய அனுமதிக்காதீர்கள் கடந்த அரசாங்கம் ஒரு ஏகாதிபத்திய ஆட்சி என்றால் இது புதினமான ஒரு ஏகாதிப்பத்திய ஆட்சி, ஏன் என்றால் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியை மாத்திரமே தெரிவு செய்வார்கள். ஆனால் அந்த அரசாங்கம்,ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் என மூவரையும் தெரிவு செய்துள்ளார்கள். இது என்ன முறைமை? என கேள்வியெழுப்பியுள்ளார்.
    அதனால் கௌரவ சபாநாயகர் அவர்களே தங்களின் அதிகாரங்களை விரும்பிய முறைமையில் நடைமுறைப்படுத்திக்கொள்ளுங்கள் தயவு செய்து பாராளுமன்றத்தில் இதுவரை நடைமுறைபடுத்தப்பட்ட சம்பிரதாயங்களை மாற்றாதீர்கள்.
    08 எதிர்கட்சிகள் இருந்தால் அந்த 08ற்கும் ஒரு எதிர்கட்சி தலைவரே இருந்தாரே ஒழிய அரசாங்கத்திற்கு என்று ஒரு எதிர்கட்சி தலைவர் இருக்கவில்லை. இப்பொழுது இந்த அரசாங்கத்திற்கு என்று ஒரு எதிர்கட்சி தலைவரை உருவாக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டாம். அவ்வாறான எதிர்கட்சி தலைவர்கள் எங்களுக்கு தேவையில்லை.
    எதிர்கட்சிக்கே எதிர்கட்சி தலைவர் தேவை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி “அ” ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி “எ” என்று இரண்டு கட்சிகள் உள்ளதா? ஸ்ரீ.சு.க.அ என்றால் அரசாங்கம், ஸ்ரீ.க.சு என்றால்  எதிர்கட்சி அவ்வாறு இரு கட்சிகள் இருப்பின் அதற்கான எழுத்து மூல ஆவணம் தங்களிடம் சமர்பிக்கப்பட்டிருந்தால் ஸ்ரீ.சு.க எ விற்கு எதிர்கட்சி தலைமை பதவியை வழங்குங்கள்.
    அவ்வாறு இரு கட்சி இல்லாமல் ஒரு கட்சி மாத்திரம் இருக்குமென்றால் அந்த கட்சிக்கு இருப்பது ஒரே தலைவர் எனில் அந்த கட்சி எங்கு உள்ளதென ஆராய்ந்து கண்டுபிடியுங்கள். அது இப்பொழுது அரசாங்கத்திலா அல்லது எதிர்தரப்பிலா உள்ளது? கண்டு பிடித்து அதனை சரியான இடத்திற்கு அனுப்புங்கள். எதிர்கட்சி தலைமை பதிவியை ஈடு வைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்காதீர்கள்.
    பாராளுமன்றத்தை நகைப்பிற்கு உட்படுத்தாமல் நியாயமான தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என விமல் வீரவன்ச நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எதிர்கட்சி தலைவர் பதவியை ஈடு வைக்க இடமளிக்காதீர்கள்: பாராளுமன்றத்தில் விமல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top