• Latest News

    March 03, 2015

    அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கிடையிலான ஒன்று கூடல்

    அபூ-இன்ஷாப்:
    அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளத்தின் ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கிடையிலான ஒன்று கூடல் நிகழ்வு இன்று (02) சம்மாந்துறை இல் இக்றாஹ் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

    அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளத்தின் தலைவர் மௌலவி யூ.எல்.றிபாயூதீன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளத்தின் செயலாளர் எஸ்.எல்.மன்சூர், சம்மாந்துறை வலயத் தலைவர் எம்.எல்.ஜூனைட், அக்கறைப்பற்று வலயத்தின் தலைவர் மௌலவி எம்.எம்.நபீஸ், கல்முனை வலய செயலாளர் மௌலவி எம்.ஐ.எம்.ஹிதாயதுல்லா, அக்கறைப்பற்று வலய செயலாளர் எஸ்.றபீயுத்தீன் உட்பட பாடசாலை அதிபர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அஹதிய்யா (தஹம்) ஞாயிறு பாடசாலைகளை நடாத்துவதில் அண்மைக்காலமாக காணப்பட்டு வருகின்ற குறைபாடுகள் சிக்கல்கள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளளைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

    மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளத்தின் தலைவர் மௌலவி யூ.எல்.றிபாயூதீன் உரையாற்றுகையில் அம்பாறை மாவட்டத்தில் அஹதிய்யா (தஹம்) ஞாயிறு பாடசாலைகள் பெரும்பாலான பிரதேசங்களில் அரச பாடசாலைகளில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
    கடந்த சில வருடங்களாக அரச பாடசாலைகளில் அஹதிய்யா (தஹம்) ஞாயிறு பாடசாலைகளை நடாத்த முடியாது என்பதாக பாடசாலைகளின் அதிபர்கள் சிலர் மறுத்ததனால் இந்த பாடசாலைகளை சிலர் தனிப்பட்ட இடங்களில் நடாத்தி வருகின்றனர் இதனால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளினாலும் மாவட்ட நிர்வாகிகளினாலும்  பாடசாலைகளை கண்கானிக்க முடியாத நிலை தோன்றியது.

    இதனை கருத்தில் கொண்டு அரச பாடசாலைகளில் இந்த பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் அவர்களை சந்தித்து கலந்துரையாடப்பட்டதாகவும் இதனை ஏற்றுக் கொண்ட மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களினால் சகல பாடசாலைகளுக்கும்  அஹதிய்யா (தஹம்) ஞாயிறு பாடசாலைகளை நடாத்த அனுமதி வழங்குமாறு சுற்று நிருபம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு சகல அஹதிய்யா பாடசாலைகளும் அரச பாடசாலைகளில் நடாத்து மாறும் தமக்கு வழங்கப்பட்ட அமானிதமான பொறுப்பை சரியான முறையில் இறைவனின் திருப் பெர்ருத்தத்துக்கு அமைவாகவும் நடாத்தமாறும் கேட்டுக் கொண்டார்.

    எதிர் காலத்தில் எமது பாடசாலைகள் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கிடையிலான ஒன்று கூடல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top